Sunday, May 28, 2017

Prayer for Sleeping Joseph - Tamil



Image result for sleeping joseph

ஓ புனித சூசையப்பரே, நீர் மனிதராக இருந்த போது உன்னதமானவரால் பெரிதும் நேசிக்கப்பட்டீர். 

திருக்குடும்பத்தின் மீது நீர் அக்கறைக்கொண்டு இருக்கும் போது ஆண்டவரின் தூதர் உமது கனவில் தோன்றி, உம்மை எச்சரிக்கவும், வழிகாட்டவும் செய்தார்.

நீர் அமைதியானவர், திடம்படைத்தவர், விசுவாசமும் தைரியமும் உள்ள பாதுகாவலர்.

நீர் இறைவனிடத்தில் நித்திய சமாதானத்தில் இளைப்பாறுகையில் எங்களை தயவுகூர்ந்து பாரும்.

எங்கள் தேவைகளை (உங்கள் கோரிக்கைகளையை குறிப்பிடுங்கள்) உமது இதயத்தில் கேட்டருளும்.

எங்கள் தேவைகளை நினைத்து பாரும்  அவற்றை உமது அன்பு மகனிடம் இருந்து எங்களுக்கு பெற்று தந்தருளும்.

நான் தூக்கத்தில் கடவுளின் குரலை  கேட்கவும், அதன் படி எழுந்து அன்புடன் செயல்படவும்  எனக்கு உதவியருளும்.

புனித சூசையப்பரே நான் உம்மை நேசிக்கின்றேன், மகிழ்ச்சியோடு கடவுளை புகழ்ந்து நன்றி செலுத்துகிறேன். 

- ஆமென் 

Sunday, March 16, 2014

ஏதென்ஸின் பள்ளிகூடம்



"ஏதென்ஸின் பள்ளிகூடம்" எனக்கு பிடித்த ஒரு புகழ் வாய்ந்த முரால்(mural) ஒவியம்(உத்திரம் மற்றும் சுவற்றில் வரையப்படும் ஒவியம்).

இது  இத்தாலிய ரெனெஸ்ஸான்ஸ்(1400 - 1690) கால கட்டத்தில் வரையப்பட்டது. உலக புகழ் பெற்ற  ஒவியரும் கட்டிடக்கலைஞருமான ரப்ஹெலால் (Raphel) வரையப்பட்டது.

சரி ரிமஸ், அப்படி என்ன தான் இருக்கிறது இந்த ஒவியதில்  ? !!

இந்த ஒவியம் பல்வேரு நிலைகளில் என்னை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு  நிலையக நாம் பார்க்கலாம்.

முதலில் இந்த ஒவியதின் கருத்தாக்கம்(concept).

இந்த ஒவியம் பல்வெரு மெய்தேடல் அறிஞர்கள் ஒரு கூடாரத்தில் ஒன்றுகூடி இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவற்றுள் முதன்மையனவர்களான சாக்ரடீஸின் பிரதான சிடரான ப்ளடோ(Plato)வையும், அவரது சிடரான அரிஸ்டாடில்(Aristotle)-லையும் இந்த ஒவியதின் மைய பகுதியில் எதோ விவாதம் செய்து கொண்டு இருப்பதை பார்கலாம்.


ப்ளடோ "இந்த திடபொருள் உலகத்தை சார்ந்த எல்லா தோற்ற்ங்களுக்கும்(Form) ஒரு பிரதான(உயரிய) சாராம்சம்(Abstract)" இருப்பதாக தன் விரலை உயர்த்தி சுட்டி காட்டி இருபது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் வலக்கரத்தில் திமியாஸ் என்ற தனது மெய்தேடல் உரையாடல்களின் தொகுப்பை வைத்திருகிறார்.

இதற்கு மாறாக அரிஸ்டாடில் இந்த திடபொருள் உலகத்தை அறிவியல் ஆய்வோடும் ஆராச்சினாலும் மட்டுமே கண்டு உணர முடியும் என்பதை சுட்டி காட்டும் விதமாக தன் வலகையை கீழ் நோகி காட்டுகிறார், மற்றும் ஒரு கையில் தனது சொற்பொழிவுகளின் தொகுப்பான "நெறிமுறைகள்" (Ethics) என்ற புத்தகத்தை வைத்து இருகிறார்.

ப்ளடோவின் வலது புறதில் சாக்ரடிஸ் இளைஞர்களின் மத்தியில் உரையாடுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.




Tuesday, December 11, 2012

எது இன்பம் ?

இந்த காலத்தில் எது இன்பம் எது துன்பம் என்று நம்மில் பலருக்கு தெரிவதே இல்லை. நாம் எந்த காரியமும் செய்யாமல் சும்மா இருக்கும் பொழுது நம் மனம் அலை பாய்கிறது. அப்பொழுது நாம் இசை, கவிதை, ஓவியம், புத்தகம்  போன்றவற்றில் மனதை செலுத்துதல் சாலசிறந்தது.

தோட்டம் வளர்த்தல்(Gardening), வண்ண மீன்கள் வளர்த்தல்(Aquarium) - இவைகள் கூட மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஆலயத்திற்கு குடும்பத்தோடு சென்று வழிபாடு புரிதல் ஒரு வகை மகிழ்ச்சி. அதி காலையில் எழுந்து உடல் பயிற்சி செய்தல் உடலிற்கு மட்டும் அல்ல மனதிற்கும் வலிமையை அளிக்கின்றது.

உழைப்பு என்பது ஒரு பேரின்பம், அதை  பலரும் புரிந்துகொள்வதே இல்லை.

இவ்வகை செயல்கள் செய்யும் போது மட்டும் அல்ல அதை நினைக்கும் பொழுது எல்லாம் மன நிறைவும் மகிழ்ச்சியும் தரும். ஒரு வகையில் ப்லோக்கிங்(blogging) கூட மன நிறைவை தருகிறது.

வாழ்கையில் நாம் எப்பொழுதும் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும், எப்பொழுதும் ஓடிகொண்டே இருக்கவேண்டும். நாம் நின்றுவிட்டால் தேங்கிய நீரோடையாக மாறிவிடுவோம்(பிறகு, ஒன்று காய்ந்து விடுவோம், இல்லை அசுத்தமாக மாறிவிடுவோம்).

Friday, May 18, 2012

சிந்தனையாளரின் கையீடு

சில நாட்களாக, சிந்தனையாளரின் கையீடு(Philospher's Notes) புத்தகத்தை வாசித்து கொண்டு இருக்கிறேன். இந்த புத்தகத்தின் ஆசிரியர் வாழ்க்கைக்கு தேவையான சிந்தனைகளை, குறிப்புகளை ஒன்றுசேர்த்து வழங்கி உள்ளார்.

உங்களுக்காக சிலமாறுதல்களுடன்  சிந்தனையாளரின் கையீடின் மன வரைபடம்.


அந்த பத்து வாழ்க்கை வளத்திற்கான அடிப்படை கோட்பாடுகள்:
1. உயரிய எண்ணங்கள் - Mindfulness
2. வாழ்கையின் நோக்கம் - Life's Purpose
3. சுய உணர்வு - Self Awareness
4. குறிக்கோள் - Goals
5. செயல் - Action
6. ஆற்றல் - Energy
7. ஞானம் - Wisdom
8. தன்னம்பிக்கை - Self Confidence
9. அன்பு - Love
10. கடவுள் நம்பிக்கை - En*theos

உயரிய எண்ணங்கள்:
                            நாம் நமது எண்ணங்களை மேன்படுத்தாவிட்டால் நமது வாழ்க்கை முன்னோக்கி செல்லாது. நமது வாழ்க்கையின் அடிப்படை நமது எண்ணங்களை பொறுத்தே அமைகிறது. இதையே புத்தர் "நமது எண்ணங்களே நாம்" ("We are what we think") என்று கூறுகிறார்.

வாழ்கையின் நோக்கம்:
                          நமது வாழ்கையின் நோக்கம் என்னவென்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். நாம்  எதை செய்தால் நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது ? நாம் எதை செய்தால் நமது மனம் முழுவதுமாக முழ்கிவிடுகிறது, புத்துணர்ச்சி அடைகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

சுய உணர்வு:
                       "நீ உன்னை அறிந்தால்...உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..." என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது. ஒருமுறை டெல்பி-யின் ஆரக்கிள்(Oracle of Delphi) சாக்கரடிஸ் தான் உலகத்தின் தலை சிறந்த ஞானி என்று உரைத்தது, ஏன் என்றால் அவருக்கு தான் தனக்கு என்ன தெரியாது என்று தெரியும் என்று கூறியது. நாம் நம்மை பற்றி எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தே நம் வாழ்கையின் வெற்றி தோல்வி அமைகிறது.

குறிக்கோள்:
              குறிக்கோள் இல்லாத வாழ்க்கை இருட்டில் விளக்கு இல்லாமல் நடப்பதற்கு சமம். நமக்கு குறிக்கோள் இல்லாவிட்டால் வாழ்க்கை என்னும் ஓடத்தில் காய்ந்த இலைகளை போல நாம் அடித்து செல்லப்படுவோம். குறிக்கோள் ஒரு கலங்கரை விளக்காக இருந்து நமது செயல்களை ஒருமுகப்படுத்துகிறது.

செயல்:
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"
இதற்கு மேல் "செயல்"-லை நான் சொல்ல என்ன இருக்கிறது.

ஆற்றல்:
               நமக்கு அளவிட முடியாத ஆற்றல் இருப்பதாக நம்மில் பலர் தவறாக எண்ணி கொண்டிருக்கிறோம். ஆற்றலுக்கு வரையரை உள்ளது. ஆற்றலை கையாளும் அறிவு நமக்கு தேவைபடுகிறது. தேவையில்லாத சொற்ப காரியங்களில் நமது ஆற்றலை செலவிட்டால் நாம் எவ்வாறு நமது குறிக்கோள்ளை அடையமுடியும்.
 
ஞானம்:
         "பெரியவர்கள் சொனால் பெருமாள் சொன்ன மாதிரி" என்பது பழைய கதை. நமக்கு வயது கூடி கொண்டே போனால் ஞானமமும் அதிகரித்து கொண்டே செல்லும் என்பது சாத்தியம் அல்ல. நமக்கு வாழ்க்கை தரும் அனுபவங்களை அலசி ஆராய்ந்த பின்னரே நமக்கு ஞானம் தோன்றும்.

தன்னம்பிக்கை:
தன்னம்பிக்கை என்பது தூண். அதுவே நம்மை தோல்வியை கண்டு துழன்று விடாமல் நம்மை தாங்கி நிற்கும். தன்னம்பிக்கை என்பது ஒரு திறமை அதை நம்மால் வளர்த்து கொள்ள முடியும்.


அன்பு:
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" - அன்புள்ள வாழ்கையே பயண்ணுள்ள வாழ்க்கை என்கிறார் உலகத்தின் முதல் சுய முன்னேற்ற நூலை எழுதிய நமது திருவள்ளுவர்.

கடவுள் நம்பிக்கை:
மனிதனுக்கு இறை நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு தேவை. நமது வாழ்கையின் பல்வேறு இடங்களில் நாம் இறைவனை பார்க்கலாம். உன் மீது நம்பிக்கை கொண்டுள்ள இறையாற்றலின் மீது நீ நம்பிக்கைவை.

வரும் வாரங்களில் ஒவ்வொரு அடிப்படை கோட்பாடுகளையும் தனித்தனியாக பார்போம்.

Friday, February 17, 2012

நான் யார் தெரியுமா ? - புதிரீடுகள்

இன்று நாம் சுய-குறிப்பு அல்லது சுய-நோக்கு புதிரீடுகளை(Self-Referential Paradoxes) பற்றி பார்ப்போம்.

இந்த வகை புதிரீடுகளை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ரேனே மக்ரிட்டே(Rene Magritte) என்ற பெல்ஜியம் நாட்டு ஓவியர் தான் நினைவுக்கு வருவார். அவர் ஒரு புகை பிடிக்கும் குழாயை(Cigarette Pipe) வரைந்து, அதற்கு பக்கத்தில் "இது புகை பிடிக்கும் குழாய் அல்ல" என்று எழுதி வைத்திருந்தார். (Refer: http://en.wikipedia.org/wiki/The_Treachery_Of_Images).

அதாவது இது வெறும் படம் தான், உண்மை அல்ல என்று தெரிவிக்கவே அவர் இவ்வாறு எழுதி வைத்திருந்தார்.

சரி ரீமஸ், மேட்டருக்கு வா, "சுய-குறிப்பு புதிரீடுகள்" என்றால் என்ன ? ஓகே !!!
இதை ஒரு உதாரணத்தோடு விளக்குகிறேன்:

"இந்த வாக்கியம் உண்மை அல்ல." - சுய-குறிப்பு புதிரீடு.

இந்த வாக்கியத்தை உண்மையாக எடுத்து கொண்டால், அது பொய்யாக மாறிவிடும். இதை பொய்யாக எடுத்து கொண்டால், அது உண்மையாக மாறிவிடும். இப்படி தனக்கு தானே சுற்றி கொண்டிருக்கும். இதை "பொய்காரனின் புதிரீடு"(Liar's Paradox) என்று அழைப்பார்கள்.

இந்த மாதிரி புதிரீடுகளை முதலில் கையாண்டவர் கிரேட்டே(Crete) நாட்டை (கிரேக தீவு) சேர்த்தவர். இவர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்த்த ஒரு சிந்தனையாளர்(நான் அவரை ஞானி(Philosophers) என்று அழைக்க விரும்பவில்லை).

இவரது புதிரீடு:
"கிரேட்டே நாட்டை சேந்தவர்கள் எல்லோரும் உண்மையை பேச மாட்டார்கள்."

இவர் சொன்னதை உண்மை என்று எடுத்து கொண்டால், இவரும் உண்மை பேச மாட்டார் (ஏன் என்றால் இவர் கிரேட்டே நாட்டை சேந்தவர்).
இவர் சொன்னதை பொய் என்று எடுத்து கொண்டால், இவர் உண்மை பேசுவார்(ஏன் என்றால் இவர் கிரேட்டே நாட்டை சேந்தவர்) ஆனால் இவர் சொன்னது பொய்யா ?

இன்னொரு உதாரணம்:
ஒரு முறை கிருஷ்ணா தேவராய, தெனாலி ராமனை அழைத்து "நீ ஒறு வாக்கியம் கூறவேண்டும், அது உண்மையானால் உன்னை தூக்கில் போடுவேன், அது பொய்யானால் உன் தலையை வெட்டி விடுவேன்" என்று கூறினார். அதற்கு தெனாலி பொறுமையாக "மன்னா, என் தலையை வெட்டப்படும்." என்று கூறி உயிர் தப்பினார்.

சுய-குறிப்பு புதிரீடுகளை கொண்டு நாம் சுயதை பற்றி ஆராயலாம். "சுயம்"(Self) என்றால் என்ன, அது எங்கு இருந்து வந்தது ? மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்து காட்டுவது "சுய-சிந்தனை"(Self-Consciousness/Self-Awareness). மனிதனால் மட்டுமே அவனை அவனிடம் இருந்து பிரித்து, அவனை பற்றி சிந்தனை செய்து பார்க்க முடியும்.

"நான் யார் .. நான் யார்.." என்று நம்மை நாமே கேட்டுகொண்டே போனால், நாம் முடிவற்றவர்கள்(Infinite Beings) என்று தெரியும்.

இனி யாராவது உங்களை பார்த்து "நான் யார் தெரியுமா?" என்று கேட்டால், "முதலில் நீ யார் என்று உனக்கு தெரியுமா?" என்று மாற்றி கேளுங்கள்.

Sunday, December 18, 2011

சூப்பர் ஸ்டாரும் ஸினோவும்

ஸினோ(Zeno of Elea), எலியா என்ற இடாலியா நகரத்தில் வாழ்த்த ஒரு தத்துவ ஞானி. இவர் சாக்ரடீஸ்-க்கு முந்திய காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரது காலம் கிமு-490 முதல் கிமு 430 வரை. இவரது புதிரீடுகள் "ஆழ்த்த சிந்தனைக்கு உரியதாகவும், மிகவும் நூட்பமானதாகவும்" இருபதாக பெர்த்ராந்து ரஸ்ஸலால்(Bertrand Russell) போற்றப்பட்டது. சிந்தனை புதிரீடுகளின் தந்தை என்றே இவரை அழைக்கலாம்.

இப்பொது அவரது புதிரீடுக்கு செல்வோம ...

ஒரு முயலுக்கும் ஆமைக்கும் போட்டி வைத்தால், எது வெல்லும் ? முயல் தன வெல்லும் என்பது எலோருக்கும் தெரியும். அனால், ஸினோவின் புதிரீடின் படி, ஆமை முயலை விட சிறிது நேரத்திற்கு முன் கூடியே போட்டியில் புறபட்டால், முயலல் ஆமையை ஒருபோதும் வெல்ல முடியாது என்பதே இவரது புதிரீடு. இது எப்படி ஐயா சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம்.இவரது விவாதத்தை உங்கள் பார்வைக்கு:

உதரணத்திற்கு, போட்டி T0 என்ற காலகட்டத்தில் D0 என்ற இடத்தில இருந்து துவங்குகிறது என்று வைத்து கொள்வோம். முதலில் ஆமை புரபடுகிறது, அது D1 என்ற தூரத்தை Tx1 என்ற கால இடைவெளியில் கடக்கிறது. இப்பொது D0 வில் இருக்கும் முயல் புரபடுகிறது, அது D1 தூரத்திற்கு வருவதற்கு Ty1 என்ற கால இடைவெளி தேவைபடுகிறது என்று வைத்து கொள்வோம். இந்த Ty1 என்ற கால இடைவெளியில், ஆமை D2 என்ற தூரத்தை Tx2 என்ற கால இடைவெளியில் கடக்கும். இப்பொது D1 யில் இருக்கும் முயல், D2 தூரத்திற்கு வருவதற்கு Ty2 என்ற கால இடைவெளி தேவைபடும். இந்த Ty2 என்ற கால இடைவெளியில், ஆமை D3 என்ற தூரத்தை Tx3 என்ற கால இடைவெளியில் கடக்கும்...

இவ்வாறு இந்த கதை ஒரு முடிவு இல்லாமல் சென்று கொண்டே இருக்கும்.

இதுவே புகழ்பெற்ற "ஸினோவின் புதிரீடு"(Zeno's Paradox). அட இது எங்கயோ கேள்விபட மாதிரி இருக்குதே? இதுக்கும் சூப்பர் ஸ்டார்-கும் என்னையா சம்மந்தம் ??? எந்த சூப்பர் ஸ்டார் படம் நீங்க கடைசியா பாத்தீங்க :-)

எண்ணம் ரோமியோ எழுத்து ஜூலிட் :-)

Thursday, September 22, 2011

பைத்தியத்துக்கு வைத்தியமும் ரஸ்ஸல்லின் புதிரீடும்(Paradox)

சிறு வயது முதல் எனக்கு கணிதம் என்றாலே ஒரு கசப்பு, ஆது ஏனோ தெரியவில்லை. பள்ளி முடித்து கல்லூரி சென்ற பிறகு கணிதம் என்னை ஈர்த்தது.
கணங்களின் கோட்பாடு (Set Theory) என்னை மிகவும் கவர்தது, ஏன் என்றால் அது மிகவும் எளிது.

கணம்(Set) என்றால் ஒரு குழுமம்(Group). ஒரு வகைப்பட்டவைகளின் கூட்டமைப்பு - கணம்.
உதரணத்திற்கு:
* ஒற்றைப்படை எண்கள் கணம் என்பது எல்லா ஒற்றைப்படை எண்களின் குழுமம். இதன் அங்கத்தினர்கள் = {1,3,5...}
* இரட்டைப்படை எண்கள் கணம் என்பது எல்லா இரட்டைப்படை எண்களின் குழுமம். இதன் அங்கத்தினர்கள் {2,4,6...}
* இயற்கை எண்கள் கணம் என்பது {ஒற்றைப்படை எண்கள் கணம் + இரட்டைப்படை எண்கள் கணம்} = {1,2,3,4,5,6...}

பெர்த்ராந்து ரஸ்ஸல்லின்(Bertrand Russell) புதிரீடுக்கு(Russell's Paradox) வருவோம், அந்த புதிரீடு என்னவென்றால்:
"தனக்கு தானே அங்கம் வகிக்காத "எல்லா" கணங்களின் கணம் என்பது ஒரு முரண்பாடு."

இதை விலக ஒரு உதாரணம்:
ஒரு ஊர்ல ஒரே ஒரு வைத்தியர் இருந்தாறு. அந்த ஊர்ல தனக்கு தானே வைத்தியம் பார்க்க தெரியாதவுங்கலுக்கு அந்த வைத்தியர் வைத்தியம் பார்தரு.
இப்போ கேள்வி என்னன்னா "அந்த வைத்தியருக்கு யாரு வைத்தியம் பார்க்குறது?"

இப்போ முரண்பாடு:
பதில்:
ஒன்னு அவரே வைத்தியம் பார்க்கணும்
இரண்டு அந்த ஊர் வைத்தியர்(அவரே) வைத்தியம் பார்க்கணும்

அனால் இது இரண்டுமே சத்தியம் இல்லை:
ஒன்று: அவருக்கு அவரே வைத்தியம் பார்க்க தெரிஞ்சதால, வைத்தியர் (அவரே) அவருக்கு வைத்தியம் பார்க்க முடியாது
இரண்டு: அவருக்கு வைத்தியம் பார்க்க தெரியலைன, வைத்தியர் (அவரே) அவருக்கு வைத்தியம் பார்க்க முடியாது (ஏன் என்றல் அவருக்கு வைத்தியம் பார்க்க தெரியாது)

அது எல்லாம் சரி ரீமஸ், அப்போ எதுக்கு "பைத்தியத்துக்கு வைத்தியமும்...." டைட்டில் வச்சிங்க ... ?
அட அது ஒனும் இல்லேங்க, இது வரைக்கும் உங்களுக்கு பைத்தியம் பிடிக்கலேன்னா:
"பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார மருத்துவமனைல, பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர்கே பைத்தியத்தியம் பிடிச்ச, அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியகார வைத்தியர்க்கு எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியரு வைத்தியம் பாபரு."

எங்கயோ கேள்வி பட்ட மாதிரி இருக்குதே, அட நம்ம விசு படத்துல வர காமெடி.

இப்படியே போன கார்க் கண்டோர்(Georg Cantor) மாதிரி நாமலும் .... ஆமாம் பெர்த்ராந்து ரஸ்ஸல்லின் புதிரீடுல கார்க் கண்டோர் எங்க வந்தாரு ... ? எல்லாத்தையும் நானே சொன்ன எப்படி, நீங்களும் கூகிள் பண்ணி படிங்க ... இன்னொரு புதிரீடுதோடு உங்களை சந்திக்கிறேன். நெக்ஸ்ட் மீட் பண்லாம்.